1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 மே 2024 (15:14 IST)

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

CSKvRCB
சிஎஸ்கே, மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி மே 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகளில் சென்னை மற்றும் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் என்னென்ன நடக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் அல்லது சென்னை அணி முதலில் 200 ரன்கள் அடித்தால் அதை 18 ஓவர்களில் எடுத்தால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

சென்னை அணியை பொறுத்தவரை பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜெயித்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.

ஒருவேளை பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி தோல்வி அடைந்தால், ஐதராபாத் அணி அடுத்து விளையாடும் இரு போட்டிகளில் தோல்வி அடைந்தால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சன்ரைசர்ஸ் அணி அடுத்து விளையாட உள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

டெல்லி கேப்பிட்டல் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் அடுத்து விளையாட உள்ள இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணிக்கு பிளே ஆப் செல்ல கிட்டத்தட்ட வாய்ப்புகள் இல்லை என்று கூறலாம். மும்பையுடன் விளையாட உள்ள அந்த அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட ரன் ரேட் மைனஸில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva