ஃபிபா உலகக்கோப்பை: இன்றைய போட்டிகள் குறித்த முழு விபரம்

i
Last Modified வியாழன், 28 ஜூன் 2018 (16:46 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணியும், மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணியும் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.
 
இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் எச் பிரிவில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் போலந்து அணி வெற்றி பெற்றால் கூட அடுத்து சுற்றுக்கு செல்ல முடியாது. ஆனால், ஜப்பான் அணி போட்டியை டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.
 
இதையடுத்து, இரவு 7.30 மணிக்கு எச் பிரிவில் நடக்கும் போட்டியில் செனகல் - கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் கொலம்பியா அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால், செனகல் அணி டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.
m
 
அதையடுத்து, இரவு 11.30 மணிக்கு ஜி பிரிவில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே ஏற்கனவே அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :