திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (22:14 IST)

பிரபல கிளப்புக்கு மாறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ !

பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோவை தங்கள் அணியில் சேர்க்க மான்செஸ்டர் சிட்டி பேசி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று முடிவடைந்துள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரர்களில் முன்னனியில் இருப்பவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் க்ளப் ஆட்டங்களில் சிரி ஏ போன்ற போட்டிகளில் ஹுவண்டெஸ் எஃப்.சிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ரொனால்டோவை இரண்டு வருட ஒப்பந்தத்தில் தங்கள் அணியில் சேர்க்க இங்கிலாந்து கால்பந்து க்ளப்பான மேன்சிட்டி எனப்படும் மான்செஸ்டர் சிட்டி க்ளப் முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ரொனால்டோவுக்கு வாரத்திற்கு 2.30 லட்சம் யூரோக்கள் என்ற கணக்கில் டீல் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் லியோனல் மெஸ்சி அணி மாறியது போல ரொனால்டோவும் மாறுவாரா என எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்த நிலையில் தற்போது மான்செஸ்டர் அணி தமது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கிறிஸ்டியானோ ரொனால்டோவை  இல்லத்திற்கு  ( மான்செஸ்டர் கிளப்பிற்கு )வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த டுவீட்டிற்கு ஒரு மணிநேரத்தில் சுமார் 7 லட்சம் பேர் லைக்குகள் பதிவிட்டுள்ளனர்.