ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:39 IST)

பார்சிலோனாவுக்கு பிரியாவிடை; பிரபல கிளப்பில் இணைந்த மெஸ்ஸி!

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிஎஸ்ஜி அணிகள் அணியில் அவர் இணைந்துள்ளார்.

 
சற்றுமுன் பார்சிலோனா அணியின் டுவிட்டர் பக்கத்தில் மெஸ்ஸி இனி தங்களது அணிக்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா அணிக்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காலாவதி ஆனதை அடுத்து அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் பார்சிலோனா அணியின் நிர்வாகம் நிதி நெருங்கடியில் சிக்கியுள்ளதாக மிகப்பெரிய அளவில் மெஸ்ஸிக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக வெளிப்படையாகவே கூறியது. இதையே மெஸ்ஸியும் கூறி, அந்த அணியில் இருந்து வெளியேறுவது குறித்து வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில், 15 வயதில் இருந்து பார்சிலோனா அணியில் விளையாடி வரும் நிலையில் திடீரென்று அங்கிருந்து வெளியேறிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி, பிரபல கால்பந்து அணி பிஎஸ்ஜி யுடன் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த அணியில்தான் பிரபல வீரர் நெய்மர் விளையாடி வருகிறார்.