வேகமாக வந்து தாக்கிய பந்து – கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம் !

Last Modified திங்கள், 10 பிப்ரவரி 2020 (16:16 IST)

செங்கல்பட்டு அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சில் பந்து தாக்கி சுனில் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. அதில் சூனாம்பேடு மற்றும் அச்சிறுபாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த வீரர்கள் மோதிய போட்டி நடந்துள்ளது. அப்போது சுனில் என்ற இளைஞர் பேட் செய்து கொண்டிருக்கும் போது கமலேஷ் என்ற மாணவன் பந்து வீசியுள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக பந்து சுனிலின் நெஞ்சில் தாக்கியுள்ளது. இதையடுத்து அம்மாணவன் மயங்கி விழ, அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அகரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :