திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:02 IST)

கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கால்பந்து விளையாட்டு உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரியல் மாட்ரில் கால்பது கிளப் அணியின் பயிற்சியாளர் சிடேனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலையாகப் பரவிவருகிறது. ஆனால் இத்தொற்று முடிந்தபாடில்லை. சாதாரணமக்கள் முதல் பிரபலங்களையும் இத்தொற்றுப் பாதித்துள்ளது.

இந்நிலையில் கால்பந்து உலகில் மிகவும் பிரபலமான கிளப் அணியான ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகப் பதவிவகித்து வரும் முன்னாள் ஸ்பெயின் தேசிய அணியின் கால்பந்து அணியின் கேப்டன் சிடனின் சிடேனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.