வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (11:53 IST)

பாடகர் மனோ மகன் குடிபோதையில் தாக்கினாரா? இருவர் அளித்த புகார் மீது நடவடிக்கை..!

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் குடிபோதையில் இருவரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல பாடகர் மனோ என்பதும் எஸ்பிபி அவர்கள் பிரபலமாக இருந்த போதே அவருக்கு இணையாக மனோவும் ஏராளமான பாடல்களை பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் குடிபோதையில் மனோவின் மகன், கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கிருபாகரனுக்கு தலையிலும் 16 வயது சிறுவனுக்கு உடலில் சில இடங்களில் காயம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகார் குறித்து காவல்துறையினர் மனோவின் மகனிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. வளசரவாக்கத்தில் உள்ள மனோவின் வீட்டிற்கு நேரில் சென்று காவல்துறை அதிகாரிகள் மனோ மகனிடம் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran