புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (14:28 IST)

காமன்வெல்த் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்? – காரணம் என்ன?

லண்டனில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் இருந்து தடகளவீரர் நீரஜ் சோப்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு லண்டனில் நடைபெறுகிறது. ஜூலை 28 தொடங்கி ஆகஸ்டு 8 வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் லண்டன் சென்றுள்ளனர்.

அவர்கள் காமன்வெல்த் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொள்வதாக இருந்த நிலையில் தற்போது அதில் அவர் கலந்துகொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.