ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: சென்னை vs மும்பை டிரா

Last Modified திங்கள், 28 அக்டோபர் 2019 (19:24 IST)
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் எந்தவித கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது

சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் சென்னை வீரர்கள் அதனை நழுவ விட்டனர்.

அதனை தொடர்ந்து 15வது நிமிடத்தில் சென்னை வீரர் மீண்டும் ஒரு கோல் அடிக்க முயன்றபோது மும்பை கோல்கீப்பர் அதனை அபாரமாக தடுத்து கோல் அடிக்க விடாமல் செய்தார்

இதனை அடுத்து இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக தொடர்ந்து விளையாடினார். இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றது

இந்த நிலையில் ஆட்டத்தின் 54 வது நிமிடத்தில் சென்னை மீண்டும் சென்னை வீரர்களுக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த கோலையும் மும்பை கோல்கீப்பர் தடுத்து விட்டதால் சென்னை அணிக்கு கோல் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது


இதில் மேலும் படிக்கவும் :