புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (13:26 IST)

’மிகப் பெரிய விஷயம் ’நடந்துவிட்டது - அமெரிக்க அதிபர் டிரம்ப் ’டுவீட்’

’மிகப் பெரிய விஷயம் ’நடந்துவிட்டது  - அமெரிக்க அதிபர் டிரம்ப்    ’டுவீட்’
உலகில் ஒரு மிகப்பெரிய விசயம் நடந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ப்பிரைஸாக ஒரு    டுவீட் பதிவிட்டிருக்கிறார்.
இராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்று தனி இஸ்லாமிக் நாடு வேண்டும் என வன்முறை தாக்குதல் நடத்தி, உலக நாடுகளையும் அச்சுத்தி,  அப்பாவி மக்களை கொன்று குவித்து  வந்த ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத்தை அமெரிக்க ராணுவப் படை கொன்றதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் ஐஎஸ்.ஐஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத் கொல்லப்பட்ட விஷயத்தைத்தான் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடுவார் என தகவல் உலக மீடியாக்களில் வெளியாகி பரவலாகி வருகிறது.
’மிகப் பெரிய விஷயம் ’நடந்துவிட்டது  - அமெரிக்க அதிபர் டிரம்ப்    ’டுவீட்’
மேலும், ஐஎஸ்.ஐஸ் பயங்கரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாத்தை சிஐஏ மூலம்  கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.