1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 14 செப்டம்பர் 2022 (21:42 IST)

பிரதமர் மோடியைப் பாராட்டிய உலகப் பெரும் பணக்காரர்!

BJP Modi
பாரதப் பிரதமர் மோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவன துணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

கணினி உலகில் மாபெரும் சாம் ராஜ்ஜியத்தை நடத்திக் காட்டியவர் பில்கேட்ஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில்  இருந்த நிலையில், தற்போது இளம் தலைமுறையினர்களான எலான் , ஜெப் பெகாஸ் உள்ளிட்டோட் தொழில் போட்டியிலுள்ளதால் பில்கேட்ஸ் பின் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்,   நாட்டில்வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எடுத்துள்ள முயற்சிகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

bill gates

அதில், இந்தியாவில் சுகாதாரம், கொரொனா தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், டிஜிட்டர் பணப் பரிவர்த்தனை இதெல்லாவற்றிலும் மோடியின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந்தியாவின் சூரிய மின் சக்தியின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும்,  தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இதில் முதலீடு செய்துள்ளதையும் பாராட்டியுள்ளார்.