வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 மே 2023 (13:33 IST)

ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் காலி.. சேப்பாக்கத்தில் களை கட்டும் பிளே ஆப் போட்டிகள்..!

chepauk
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 23ஆம் தேதி குவாலிஃபையர் 1 போட்டியும் மே 24 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கப்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஒரு சில நேரங்களில் ஒரு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்ததால்  ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்

ரூ.2000, ரூ.2500, ரூ.3000, ரூ.5000 என நான்கு விலையில் டிக்கெட் விற்பனையான நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இரண்டு பிளே ஆப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran