திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 மே 2023 (18:23 IST)

அதிகாரிகள், போலீஸாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை: கார்த்தி சிதம்பரம்

karthi chidambaram
அதிகாரிகள் போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
மானாமதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் அதிகாரிகள் போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஏற்கனவே தெரியாமல் இருந்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயம் விற்ற 1500 பேரை எப்படி கைது செய்யது செய்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் தான் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இழப்பீடு வாங்குவது தவறில்லை என்றும் அவர் கூறினார். 
 
மேலும் பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது என்றும், மற்ற கட்சி வெற்றி பெற்றால் பிரிவினை வாதம் ஜெயித்தது என்றும் கூறுவது அபத்தமான கருத்து என்றும், கர்நாடகாவில் ஊழல் ஆட்சிக்கும், பிரிவினைவாத அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran