வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2017 (11:53 IST)

சாம்பியன்ஸ் கோப்பை:வங்கதேசத்தின் விஸ்வரூபத்தை ஒரே அமுக்காக அமுக்கிய இங்கிலாந்து

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று முதல் தொடங்கியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த நேற்றை முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின



 


இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று வங்கதேசத்தை பேட்டிங் செய்ய வைத்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி வீரர்கள் நேற்று விஸ்வரூபம் எடுத்தனர். 50 ஓவர்களில் அந்த அணி 305 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் 128 ரன்களும், விக்கெட் கீர்ப்பர் முசாபர் ரஹிம் 79 ரன்களும் குவித்தனர்.

இந்த நிலையில் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியை ஆரம்பித்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஹேல்ஸ் 95 ரன்களும், ரூட் 133 ரன்களும், கேப்டன் மோர்கன் 75 ரன்களும் குவித்து 47.2 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழது 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.