ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:27 IST)

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல கிரிக்கெட் வீரர்

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வரும் கொரோனா தொற்றினால் பல எழுபதுலட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி பேட்ஸ் மேனுமான அஃப்ரிடி கொரோனா தொற்றால் பாதிப்படுள்ளார் என்ற செய்திகள் வெளியான நிலையில், இதை அவரே உறுதி செய்தார்.

இதுகுறித்து அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது :

நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் நான் பூரண குணமடைய வேண்டி பிராத்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் இதனால் பெரிதும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அஃப்ரிடி பூரணம் குணமடைய பிராத்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில், அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் எனது மனைவிக்கும் இரண்டு மகள்கான அக்ஸா மற்றும் அன்சாவுக்கு முன்பு கொரொனா பரிசோதனைஉ செய்யப்பட்டது அதில அவர்களுக்கு கொரொனா தொற்று உறுதியானது.


தற்போது மீண்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் என்  மனைவி மற்றும்  மகள்களுக்கு கொரொனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது.

எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் மக்களுக்கும்  நன்றி!  என்று தெரிவித்துள்ளார்.