1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (15:14 IST)

சென்னையை ரவுண்டு கட்டும் கொரோனா!!

சென்னையில் அன்றாடம் கண்டறியப்படும் தொற்றுகளின் மண்டல வாரியான பட்டியல் இதொ... 
 
நேற்று தமிழகத்தில் 4,343 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,343 பேர்களில் 2,027 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,531 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் மண்டல  வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராயபுரம்  8506, திரு.வி.க.நகர் 5143, அம்பத்தூர் 2798, அண்ணா நகர் 6843, தேனாம்பேட்டை 7017, கோடம்பாக்கம் 6731, வளசரவாக்கம் 2890, அடையாறு 3840, தண்டையார்பேட்டை 6941, திருவொற்றியூர்  2480, மணலி 1116, மாதவரம் 2027 ஆக உள்ளது.