1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (13:48 IST)

ஜூலை தரிசன டிக்கெட் ஃபுல் புக்: என்ன செய்ய போகிறது திருப்பதி தேவஸ்தனம்?

திருப்பதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் தேவஸ்தானம் நாளை அவசரக் கூட்டம் நடத்த உள்ளது.  
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் திருப்பதி திறக்கப்பட்டது.  
 
முதல் ஒரு வாரத்திற்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நாளை அவசரக்கூட்டம் நடத்த  உள்ளது. ஜூலை மாதத்திற்கு டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் ரூ.9.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனத்திற்காக மூன்றாயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டது. 
 
எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என தரிசனம் நடைமுறைகள் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி தேவஸ்தான ஊழியர்கள் கலந்து அலோசித்து முடிவெடுக்கவுள்ளனர்.