திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:54 IST)

மன்னிப்புக் கேட்ட பூம்ரா… அலட்சியப்படுத்திய ஆண்டர்சன் – அதன் பின் நடந்த திருப்பம்!

நடந்து முடிந்த வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி வீரர் பூம்ராவுக்கும் ஆண்டர்சனுக்கும் இடையே மோதல் எழுந்தது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆண்டர்சன் பேட் செய்ய வந்த போது அவரை தாக்கும் விதமாக பூம்ரா தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசினார். இதனால் ஆண்டர்சன் கடுப்பாகினார். ஆனால் போட்டி முடிந்த போது பூம்ரா அவரிடம் சென்று தான் வேண்டுமென்றே செய்யவில்லை என மன்னிப்புக் கேட்க சென்ற போது ஆண்டர்சன் அவமானப் படுத்தினார். பின்னர் பூம்ரா ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்ய வந்த போது இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் பவுன்சர் வீசி பூம்ராவை தாக்க முயன்றனர். ஆனால் பூம்ரா அதை சிறப்பாகக் கையாண்டு 36 ரன்கள் சேர்த்தார். அது வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது.

பூம்ராவுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் ஆக்ரோஷமாக ஒன்றிணைந்து ஐந்தாம் நாளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர். இதை இந்திய அணியின் பில்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் அஸ்வினின் யுடியூப் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.