வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:32 IST)

அம்மா வேடங்களில் நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை! ஐஸ்வர்யா ராஜேஷ் பளீச்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மாவாக நடிப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பூமிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது முதலில் விஜய் தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். அப்போது இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது பற்றி பேசினார், அதில் ‘இப்போது இதுபோன்ற வேடங்களில் நான் மட்டுமே நடிக்கிறேன். எனக்கு தாய் வேடங்களில் நடிப்பதில் எந்த தயக்கும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.