வயதானவர் தோற்றத்தில் சிறுவர்களுக்கு அதிர்ச்சியளித்த பிரெட் லீ
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ வயதானவர் தோற்றத்தில் சென்று சிறுவர்களுடன் விளையாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளாரக பணியாற்றி வருகிறார். தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல்2018 தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. வயதானவர் போன்ற தோற்றத்தில் தன்னை மாற்றிக்கொண்டு சென்று கிரிக்கெட் விளையாடுகிறார். முதலில் சிறுவர்களுக்கு வந்திருப்பது பிரெட் லீ என்று தெரியவில்லை.
பின்னர் சிறுவர்கள் முன் வயதான வேடத்தை கலைக்க சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.