திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (07:30 IST)

பிரியங்கா தான் முதல்வர் வேட்பாளர்! உபியில் ஒங்கி ஒலிக்கும் காங்கிரஸ் குரல்

உபி மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை அறிவிக்க வேண்டும் என்று உபி மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகின்றனர். 
 
சமீபத்தில் உபி மாநிலத்தில் உள்ள ரேபேலி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சோனியா காந்தி வந்தபோது அவருடன் பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். அப்போது அவர் காங்கிரஸ் நிர்வாகிகளை வறுத்தெடுத்துவிட்டார். காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும், பாஜகவின் ஆட்சியில் உள்ள பலவீனங்களை மக்களிடம் கொண்டு போய்  சேர்க்காததே இந்த தோல்விக்கு காரணம் என அவர் கண்டித்தார்.
 
பிரியங்கா காந்தியின் இந்த அதிரடி, கண்டிப்பு உண்மையான காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உபி மாநிலத்தில் வரவுள்ள இடைத்தேர்தல் மற்றும் வரும் 2022ஆம் ஆண்டு வரவுள்ள சட்டமன்ற தேர்தலின்போது பிரியங்கா காந்தி தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிறைவேற்றுவார் என தெரிகிறது
 
மேலும் அதற்கேற்றார்போல் உபி மாநில இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பிரியங்கா இறங்கி விட்டதாகவும், அந்தந்த பகுதியில் தேர்வாகும் வேட்பாளர்கள் இப்போது முதலே தொகுதிக்கு சென்று அந்த பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று பிரியங்கா காந்தி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் மூன்று வருடங்கள் இருக்கும்போதே பக்கா பிளான் போடும் பிரியங்கா காந்தி நிச்சயம் உபியின் முதல்வராகிவிடுவார் என்றே கூறப்படுகிறது