செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (14:07 IST)

அர்ஜுனா விருதுப் பரிந்துரை பட்டியல் – கிளம்பும் புது சர்ச்சை !

விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு 4 வீரர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா போன்ற விருதுகளை இந்திய அரசு அறிவித்து அவர்களைக் கௌரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் காரணமாக இன்னும் எந்த விருதுகளும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் அர்ஜுனா விருதுக்குக் கிரிக்கெட் சார்பாக பூனம் யாதவ், முகமது ஷமி, ரவிந்திர ஜடாஜா, பும்ரா ஆகியோர் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் வீரரான ரவிந்தர ஜடேஜா அண்மையில் தான் பாஜகவுக்கு தனது தெரிவித்த நிலையில் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் ஜடேஜாவின் மனைவி பாஜகவில் சேர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.