புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 அக்டோபர் 2020 (17:27 IST)

ரோஹித் உடல்தகுதி எப்படி உள்ளது… நாளை நடக்கிறது ஆய்வு!

இந்திய அணியின் துணை கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் ஷர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் தொடர்பாக நாளை பிசிசிஐ மருத்துவர்கள் ஆய்வு நடத்துகின்றனர்.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியினரோ ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் அவருக்கு என்ன காயம் என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் ஏ கிரேடு 1 காயம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குணமடைய 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும். இந்த காயம் நாம் நினைப்பதை விட கூடுதலானது. இதனால் ரோஹித் ஷர்மா எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து நாளை அவருக்கு பிசிசிஐ மருத்துவர்கள் சோதனை நடத்துகின்றனர். அந்த சோதனையில் அவர் உடல்தகுதி பெற்றிருந்தால் ஆஸ்திரேலிய தொடரின் பின் பகுதியில் இணைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எப்படியும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கடினம் என சொல்லப்படுகிறது.