செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 அக்டோபர் 2020 (16:35 IST)

ஐபிஎல் பார்த்த 700 கோடி பேர் – 28 சதவீதம் அதிகரித்த பார்வையாளர் எண்ணிக்கை!

உலகம் முழுவதும் ஐபிஎல் தொடரை 700 கோடி பேர் பார்த்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் ஐபிஎல் தொலைக்காட்சிகள் மற்றும் ஆன்லைன் இணையதளங்கள் வழியாக மட்டுமே பார்க்க முடியும்.

21 சேனல்களில் முதல் 41 ஆட்டங்களுக்கு 700 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28% அதிகரித்துள்ளதாக பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.