ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்ட கெய்ல் – அதனல் அபராதம் கட்டும் யுனிவர்ஸல் பாஸ்!
நேற்றைய போட்டியில் கிறிஸ் கெய்ல் அவுட் ஆனபோது ஆத்திரத்தில் பேட்டை வீசியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் நடக்கும் டி 20 கிரிக்கெட் தொடர்கள் அனைத்திலும் விளையாண்டு வருகிறார் யுனிவர்ஸல் பாஸ் கிறிஸ் கெய்ல். அது போல இதுவரை டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு உரியவராக இருக்கிறார். 41 வயதிலும் சிறப்பாக விளையாடும் இவர் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் சேர்த்து 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
அப்போது அவர் ஆத்திரத்தில் பேட்டை வீசினார். வழக்கமான எப்போது அவுட் ஆனாலும் சிரித்துக் கொண்டே செல்லும் கெய்ல் நேற்று நடந்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மைதானத்தில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட கெய்லுக்கு போட்டி நடுவர்கள் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் அபராதமாக விதித்தனர்.