புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2017 (22:15 IST)

ஐபிஎல் போட்டி நேரங்கள் மாற்றம்!!

ஐபிஎல் போட்டிகள் 10 சீசன் முடிந்துவிட்ட நிலையில் 11 வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன.

பிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்த வருடத்துடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது பிசிசிஐ.

வீரர்களை தேர்வு செய்வது முதல் போட்டி நேரம் அகிய அனைத்திலும் மாற்றம் கொண்டுவரபட்டுள்ளது. எப்பொழுதும் ஐபிஎல் போட்டிகளில் உரிமத்தை சோனி சேனலை பெறும் ஆனால், இந்த ஆண்டு இதனை ஸ்டார் ஸ்போட்ஸ் பெற்றுள்ளது.

பிசிசிஐ ரசிகர்களின் ரசனை குறைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் இரவு ஆட்டங்கள் 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இரவு 12 மணியளவில் முடிவடையும்.

அதன்பின் ரசிகர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லவும், வீரர்களும் ஓட்டல்களுக்குச் செல்லவும் நள்ளிரவு ஒரு மணி முதல் 1.30 மணி வரை ஆகிறது. இதனால் போட்டியை இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த ஆலோசனைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டால் போட்டி 7 மணிக்கு துவங்கும்.