திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (01:13 IST)

மிலாடிநபி விடுமுறை மாற்றத்தால் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்

தமிழக அரசு விடுமுறை பட்டியலில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி மிலாடிநபி காரணமாக விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நவம்பர் 19ஆம் தேதி பிறை தென்பட்டுள்ளதால் டிசம்பர் 2ஆம் தேதியே மிலாடி நபி என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.





இதனையடுத்து டிசம்பர் ஒன்றுக்கு பதில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசின் தலைமை காஜி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.

இதன்படி வரும் டிசம்பர் 2ஆம் தேதி, மிலாடி நபி பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அந்த நாளில் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.