இங்கிலாந்து பறக்கும் ரிஷப் பண்ட் – பிசிசிஐ அழைப்பு !

Last Modified வியாழன், 13 ஜூன் 2019 (11:10 IST)
கடந்த போட்டியில் காயமடைந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்குப் பதிலாக மாற்று வீரராக ரிஷப் பண்ட் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிகார் தவானுக்கு எதிர்பாராத விதமாக கைவிரலில் காயம் பட்டது. விரலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் மயிரிழை அளவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்துள்ளனர்.  இதனால் ஷிகார் தவான் உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இன்றையப் போட்டியிலும் அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். ஒருவேளைக் காயம் சரியாகப் பட்சத்தில் அவர் உலககோப்பையில் இருந்து விலக நேரிடும்.

இந்நிலையில் ஷிகார் தவானுக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அழைத்துள்ளது பிசிசிஐ. அவர் இங்கிலாந்து புறப்படும் அவர்  மான்செஸ்டர் நகருக்குப் பாகிஸ்தான் போட்டி நடக்கும் அன்று சென்று சேர இருக்கிறார். இங்கிலாந்து சென்றாலும் அவர் இந்திய அணியினரோடு தங்கவோ, அவர்களோடு பஸ்ஸில் பயணம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார். வலைப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே தங்க வைக்கப்படுவார்.

ஷிகார் தவானின் விலகல் குறித்து  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்ட பின்புதான் ரிஷப் பண்ட் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :