டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வங்கதேசம்

Bangladesh
Last Updated: செவ்வாய், 5 ஜூன் 2018 (20:21 IST)
ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஆப்கானிஸ்தான் - வங்க தேசம் இடையேயான டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியுள்ளது. 
 
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அசத்தலான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதாலும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விளையாடுவதால் இந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. நடந்து முடிந்து ஐபிஎல் 2018 சீசன் மூலம் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
 
இந்திய ரசிகர்கள் பலர் ரஷித் கானை இந்திய அணிக்காக விளையாட கோரிக்கை விடுத்தனர். சிலர் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று சமூக வலைதலங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :