6 விக்கெட்டுக்களை இழந்த வங்கதேசம். இந்தியாவின் வெற்றி உறுதியா?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது
இந்தியா தனது முதல் இன்னிங்சை 404 ரன்களுக்கு முடித்துக் கொண்ட நிலையில் 2-வது இன்னிங்சில் 258 ரன்களுக்கு இரண்டு விக்கெட்கள் இழந்த போது டிக்ளேர் செய்தது
இதனை அடுத்து வங்கதேச அணி 513 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நிலையில் தற்போது 272 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் 4 விக்கெட்டுகளை கையில் வைத்துள்ள வங்கதேச அணி இன்னும் வெற்றிக்கு 241 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்
Edited by Mahendran