1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (07:02 IST)

மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி: புள்ளிப்பட்டியலில் 7வது இடம்!

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 19ஆம் தேதி சென்னை அணியுடன் மோதியபோது தோல்வியடைந்த மும்பை அணி கடந்த 23ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணி வெறும் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி 56 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து 166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் ரோகித் சர்மா மற்றும் குவின்டன் டி காக் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்
 
இதனால் அந்த அணி 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது என்பதும் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியின் ஹர்ஷல் பட்டேல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிளன் மாக்ஸ்வெல்  ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது