வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (17:32 IST)

அதிரடியாக விளையாடியும் 4 ரன்களில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான்!

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக பேட்டிங் செய்தபோதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது.
 
இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்தது
 
இதனை அடுத்து 169 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது இதனையடுத்து 19வது ஓவரில் 11 ரன்கள் அடித்தால் 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது 
 
கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்று அடித்த போதிலும் அந்த அணியால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  
 
 
Edited by Siva