1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:07 IST)

221 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி: பரிதாப தோல்வியில் இங்கிலாந்து

eng vs aus
221 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி: பரிதாப தோல்வியில் இங்கிலாந்து
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 221 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் சதம் அடித்தனர்
 
இந்தநிலையில் 356 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 31.4 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே 2 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தற்போது 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றதை அடுத்து 3 - 0 என்ற கணக்கில் அபாரமாக தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran