திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (08:33 IST)

BiggBoss 4: டைட்டிலை ஜெயித்த ஆரி - குவியும் வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனை வென்ற ஆரிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த ஆண்டுகளை விட கொரோனா காரணமாக இந்த ஆண்டு சில மாதங்கள் தாமதமாகவே அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 
 
இவர்களில் சோம், ரம்யா, ரியோ ஆகியோர் ஒவ்வொருத்தராக வெளியேறிய நிலையில் பாலா மற்றும் ஆரி இறுதியாக வந்து நின்றனர்.  பின்னர் இவர்களில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.  
 
ஆரிக்கு பிக்பாஸ் டைட்டில் மற்றும் கோப்பை, 50 லட்சத்திற்கான காசோலையும் கொடுக்கப்பட்டது. டைட்டில் ஜெயித்த ஆரிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆரியின் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #AariArjunan,  #AariMadeHistory ஆகிய ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகின்றனர்.