திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (10:41 IST)

ஒரு தாய் மக்களுக்கு வாழ்த்து கூறிய விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் இளம் நடிகரான விஜய் சேதுபதி வித்தியாசனான படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் தனது கேரியரை முடித்துக்கொள்ளாமல் எந்த ஹீரோவும் இதுவரை யோசித்துக்கூட பார்க்காத வில்லன் வேடத்தில் நடித்து அசதி வருகிறார். 
 
விக்ரம் , ரஜினிக்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து விஜய் சேதுபதி தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குங்களில் ஓஹோன்னு ஓடிக்கொண்டிருக்கிறது. வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தால் மார்க்கெட் சரிந்துவிடும் என அச்சப்படும் பெரிய நடிகர்களுக்கு மத்தியில் வித்யாசமான ரோல்களில் வெளுத்து வாங்கி வருகிறார் விஜய் சேதுபதி. 
 
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், " அண்ணனுக்குஜே திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஏறுதழுவுதலை மையப்படுத்தி உருவாக்கி வரும் "ஒரு தாய் மக்கள்" ஆவணப்படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் என கேப்ஷன் கொடுத்து அந்த படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.