வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:14 IST)

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி..!

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 48.5 ஓவர்  ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 266 ரன்கள் எடுத்தது.  
 
இஷான் கிஷான் 82 ரன்களூம், ஹர்திக் பாண்டே அதிரடியாக விளையாடி 87 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 267 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாட தயாரான போது மழை குறிக்கிட்டது. கடைசிவரை மழை நிற்கவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது
 
Edited by Siva