செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (15:58 IST)

#AdityaL1 விண்கல திட்ட இயக்குநருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

Nigar Shaji
#AdityaL1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி பணியாற்றியுள்ள நிலையில், இவருக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்

சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து  பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட  ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து பிரதமர் மோடி, ''சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இன  நன்மைக்கும், இந்த பிரபஞ்சத்தை சரியாக புரிந்து கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்’’ என்று கூறி, ‘’ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்’’ கூறியுள்ளார்.

#AdityaL1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி பணியாற்றியுள்ள நிலையில், இவருக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும்  #AdityaL1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.