புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:55 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேச வீரர் அபார சதம்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் சாம்பியன் யார்? என்பதை முடிவு செய்யும் இறுதிபோட்டி தற்போது துபாயில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது

இதனையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சற்றுமுன் 7 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓவர்களில் 196 ரன்கள் குவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த வங்கதேச அணி பின்னர் குல்தீப், ஜாதவ் சுழலில் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தனர். இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் லிடான் தாஸ் 121 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களளயும், கே.எம்.ஜாதவ் 2 விக்கெட்டுக்களையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.