1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (17:32 IST)

ஆசிய கோப்பை முதல் போட்டி; டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்

ஆசிய கோப்பை 2018 முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடரின் முதல் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடங்கியது. இதில் வங்காளதேசம் - இலங்கை ஆகிய அணிகள் மோதுகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாட தொடங்கியுள்ளது. மலிங்கா வெகு காலம் கழித்து இலங்கை ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் மீண்டும் பழைய நிலையில் அவரது பவுலிங்கில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.