இந்த போட்டியிலும் அஸ்வின் இல்லையா? கடுப்பான ரசிகர்கள்!
லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றமாக அஸ்வின் அணியில் இடம்பெறுவார் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே இந்த போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து அணித்தேர்வை விமர்சனம் செய்து வருகின்றனர்.