திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:05 IST)

அண்ணாத்த படத்தின் டப்பிங்கை முடித்த சூப்பர் ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை இரண்டே நாளில் முடித்துக் கொடுத்துள்ளாராம்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் இப்போது டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டாராம். அதுவும் இரண்டரை நாட்களில் மொத்த படத்தின் பணிகளையும் முடித்துள்ளார்.