புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 நவம்பர் 2021 (11:00 IST)

ஒரு வழியாக முதல் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அறிமுகப்போட்டி சதத்தால் 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இறங்கிய நியுசிலாந்து அணியும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 159 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகின்றனர்.

இதையடுத்து ஒருவழியாக அஸ்வின் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வில் யங்கை அஸ்வின் அவுட்டாக்கினார். தற்போது நியுசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களோடு விளையாடி வருகிறது.