தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று உச்சம் சென்ற தங்கம் விலை: சவரனுக்கு ரூ.496
- ஒரே நாளில் 2.86 லட்சம் பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா!
- இரண்டு ஓடிடியில் 83 படம்… பிப்ரவரி மாதத்தில் பிரிமீயர்!
- கோலிக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குக் கேப்டன் யார்? ஸ்டீவ் ஸ்மித் பதில்!
- ரோமென் பாவல் அதிரடி சதம்… இங்கிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!
நல்லா பர்பார்ம் பண்ணியும் அணியில் இருந்து தூக்கப்பட்ட அஸ்வின்!
இந்திய அணியில் இருந்து அஸ்வின் மீண்டும் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணியில் இணைந்து சிறப்பாக பந்துவீசி வந்த அஸ்வின் மீண்டும் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்காண்டுகளாக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அஸ்வின் களமிறக்கப்படவில்லை. இதையடுத்து கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் உலகக்கோப்பை டி 20 அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து அவர் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஆனால் இப்போது மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அவர் நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
