1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (10:44 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஸ்வின் படைத்த மைல்கல் சாதனை!

இந்திய கிரிக்கெட் வீரர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மட்டும் இதுவரை 100 விக்கெட்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் சுழல்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் கபில்தெவ்வின் சாதனையாக 434 விக்கெட்களைக் கடந்து அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்நிலையில் இப்போது அவர் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் 100 விக்கெட்களைக் கடந்துள்ளார். கடந்த தொடரில் 14 போட்டிகளில் 71 விக்கெட்களை வீழ்த்திய அவர், இந்த ஆண்டு இதுவரை நடந்த 7 போட்டிகளில் 29 விக்கெட்கள் வீழ்த்தி முதல் முதலாக இந்த சாதனையைப் படைத்துள்ளார்.