வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (07:15 IST)

ஆசஷ் தொடரின் 5வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆசஷ் தொடர் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கியது
 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி 382 ரன்கள் அதிகமாக ரன்கள் எடுத்துள்ளது
 
போட்டி தொடங்கி மூன்று நாட்களே முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் அதிகம் எடுத்திருப்பதால் இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி சமாளிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி விட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 294/10
 
பட்லர்: 70
ரூட்: 57
பர்ன்ஸ்: 47
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 225/10
 
ஸ்மித்: 80
லாபுசாங்கே: 48
லியான்: 25
 
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 313/8
 
டென்லி: 94
ஸ்டோக்ஸ்: 67
பட்லர்: 47