1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (10:37 IST)

5000 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா வீரர்: குவியும் வாழ்த்துக்கள்!

5000 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா வீரர்: குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. சற்றுமுன் வரை ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் நிதானமாக விளையாடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் 6 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆரோன் பின்ச் தனது 5000 ரன்கள் என்ற இலக்கை எட்டி உள்ளார். அவர் மிக வேகமாக 5 ஆயிரம் ரன்கள் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடதக்கது
 
இதற்கு முன்னர் 5000 ரன்கள் எடுத்த வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு: டேவிட் வார்னர் 115 பந்துகளில் 5000 ரன்களும், ஆரோன் பின்ச் 126 பந்துகளில் 5000 ரன்களும், டீன் ஜோன்ஸ் 128 பந்துகளில் 5000 ரன்களும், மாத்யூ ஹைடன் 133 பந்துகளில் 5000 ரன்களும், மைக்கேல் பெவன் 135 பந்துகளில் 5000 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது