ஐபிஎல் போட்டியில் சச்சின் மகன்: மும்பை அணி எடுக்குமா?
ஐபிஎல் போட்டியில் சச்சின் மகன்: மும்பை அணி எடுக்குமா?
இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற வகையில் மிகச்சிறப்பாக உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர் இணைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. 2021 ஆம் ஆண்டிற்கான அணிகள் ஏலம் விடும்போது அர்ஜூன் டெண்டுல்கரின் பெயரும் ஏலம் விடப்படும் என்றும் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
அர்ஜுன் டெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி நல்ல பவுலராகவும் இருப்பதால் ஆல்ரவுண்டர் என்ற வகையில் அவரை நல்ல விலைக்கு மும்பை அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மும்பை அணி மட்டுமன்றி பெங்களூர் ராயல் சேலஞ்ச் உள்பட வேறு சில அணிகளும் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன