செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:18 IST)

மும்பை அணியில் சச்சினின் மகன்… வைரலாகும் புகைப்படம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் வலைப்பயிற்சி வீரராக சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

ஐபில் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த சீசனின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணிகளும் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மும்பை அணியின் ராகுல் சஹார் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களோடு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இருக்கும் அந்த புகைப்படம் குறித்த கேள்விகள் எழுந்தன.

இதன் பின்னர்தான் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக துபாய் சென்றது தெரியவந்தது. ஏற்கனவே சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.