செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (17:30 IST)

போஸ்டர் சர்ச்சையில் சச்சின், ரஹ்மானை மாட்டிவிட்ட விஜய் ரசிகர்கள்!

போஸ்டர் சர்ச்சையில் சச்சின், ரஹ்மானை மாட்டிவிட்ட விஜய் ரசிகர்கள்!
கடந்த சில நாட்களாக மதுரை விஜய் ரசிகர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டி வரும் நிலையில் தற்போது இந்த சர்ச்சையில் அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானையும் சச்சின் தெண்டுல்கரையும் மாட்டிவிட்டுள்ளனர்.
 
ஆஸ்கார் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் விஜய் ஆகிய மூவரின் புகைப்படங்கள் அடங்கிய புதிய போஸ்டர் ஒன்று மதுரை நகர் முழுவதும் இன்று காலை முதல் ஒட்டப்பட்டுள்ளது
 
பல சதியால் நடந்தது இவங்களுக்கு ஏகப்பட்ட Game
சரி விடுங்க அதுனாலதான் இவங்க வேர்ல்ட் புல்லா Name
 
என்ற வாசகம் அடங்கிய இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக தேனி விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக மதுரை விஜய் ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது