சோபிக்காத ஆஃப் ஸ்பின் – மிதவேகத்துக்கு மாறிய மொயின் அலி !

Last Modified புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:55 IST)
தனது ஆஃப் ஸ்பின் பந்துவீச்சு முறைக் கைகொடுக்காததால் மிகவேகப் பந்துவீச்சுக்கு மாறியுள்ளார் மொயின் அலி.

நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் தாக்குதலுக்குப் பம்மிக் கொண்டுள்ளது. இதற்கு ஆஸியின் பந்துவீச்சில் ஏற்பட்ட சுணக்கமே காரணம். ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தால் விலகவே அந்த அணி பலம் குன்றியுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான மொயின் அலியும்  சரியாக சோபிக்காததால் அவரை முதல் டெஸ்ட்டுக்குப் பின் நீக்கியுள்ளனர். முதல் டெஸ்ட்டில் சுழல் பந்துக்கு சாதகமான மைதானத்தில் அவர் விக்கெட் எடுக்காதது விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்போது கவுண்டி கிரிக்கெட்டுக்காக விளையாடி வரும் அவர் அங்கேயும் தனது பந்துவீச்சு திறமையைக் காட்ட முடியாமல் திணறி வருகிறார்.

இதனால் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சை நிறுத்திவிட்டு மிதவேக முறையில் பந்துவீச தொடங்கினார். இதற்கு நல்ல பலனாக அவருக்கு 3 விக்கெட்கள் கிடைத்தது. அதனால் இனி மிதவேகப் பந்துவீச்சாளராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :